Tamil Nadu News Updates: சென்னை திருவொற்றியூர் – விம்கோ நகர் இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டுமே இம்மாதம் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1,300 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலி
ரஷ்ய படையெடுப்பால் இதுவரை 1300 உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 129வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் ரூ101.40-க்கும், டீசல் ரூ91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நோ கொரோனா பலி
தமிழ்நாட்டில் நேற்று கொரோனா தொற்றுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 265 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
காந்தி-களை விலக்கும் திட்டம் இல்லை – காங்கிரஸ் திட்டவட்டம்
5 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், தலைமைப் பொறுப்பில் இருந்து காந்தி-களை விலகிக் கொள்ளும் கூறுவதற்கான எந்த திட்டமும் இல்லை என காங்கிரஸ் மறுத்துள்ளது.
2 ஆவது டெஸ்ட் – இலங்கை 86/6
இந்தியா – இலங்கை மோதும் 2வது டெஸ்ட்டின் முதல்நாளில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்துள்ளது. பகலிரவாக நடைபெறும் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று மாலை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என்று அறிவித்த நிலையில், காலை 10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.5 மாநில தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது