அதிமுகவை அழித்து, ஒழித்துவிடலாம் என திமுக பகல் கனவு காண்கிறது – ஜெயக்குமார்

“அதிமுகவை அழித்து, ஒழித்துவிடலாம் என திமுக பகல் கனவு காண்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனில் வெளி வந்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி திருச்சி கண்டோன்மென்ட் (சட்டம் ஒழுங்கு) காவல் நிலையத்தில் ஆய்வாளர் சேரன் முன்னிலையில் இன்று கையெழுத்திட்டார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் திமுக அதிமுக இடையே 3 சதவீதம் மட்டுமே வாக்கு வித்தியாசம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும். 2026 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சியை கைப்பற்றும்.
image
அதிமுக மீது பொய் வழக்குகள் போட்டு அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம் என்பது பூனை பகல் கனவு கண்டதுபோல் இருக்கிறது. இந்த பகல் கனவு பலிக்காது. கழக முன்னோடிகள் மீது பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழித்துவிடலாம் என நினைப்பது ஒருபோதும் நடக்காது” என்றார்.
தமிழகம் முழுவதும் ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என தமிழக முதல்வர் குறிப்பிட்டது குறித்து நிருபர் கேட்டதற்கு, “நையாண்டியாக சிரிப்பு வருது.. சிரிப்பு வருது என்ற சந்திரபாபு பாடலை பாடி, ஊருக்குதான் உபதேசம். அவரே ஒத்துக்கொள்கிறார். தொண்டர்களை அல்ல குண்டர்களை கொண்ட கட்சி திமுக என முதல்வர் ஒத்துக்கொண்டு விட்டார்.
சமூக விரோதிகள் பல வாக்குச் சாவடிகளை கைப்பற்றினர். வழிப்பறிக் கொள்ளைகள் என அனைத்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாக இருந்தால்தான் திமுகவில் சேர அடிப்படை தகுதி என முதல்வரே சர்டிபிகேட் கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது தவறான கருத்து. அரசியலில் வெற்றி தோல்வி என்பது இருபக்க நாணயம் போன்றது. ஒரு தோல்வியை வைத்து கட்சி எடைபோட முடியாது. கட்சி கட்டுப்பாட்டை மீறி யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிஎஸ் சகோதரரே கட்சியிலிருந்து நீக்கபட்டுள்ளார். போஸ்டர் ஒட்டுவது போன்ற செயலில் ஈடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.