டெல்லி: தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஜம்மு காஷ்மீரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்துள்ளார். 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் 890க்கும் மேற்பட்ட மத்திய சட்ட பிரிவுகள் ஜம்மு காஷ்மீரிலும் அமலுக்கு வந்துள்ளது. அம்பேத்கரின் கனவு ஜம்மு காஷ்மீரில் நிறைவேறத் தொடங்கியுள்ளது எனவும் கூறினார்.