மதுரை மாநகராட்சியில் அம்மா உணவகங்களில் ஜெயலலிதா புகைப்படம் அகற்றப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியில் 12 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அனைத்து அம்மா உணவகங்களில் உள்ள பெயர் பலகைகளில் ஜெயலலிதா புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது. தற்பொழுது புதிதாக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழக அரசு மற்றும் மாநகராட்சி முத்திரை மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, எந்த மாற்றமும் இல்லாமல் அம்மா உணவகம் செயல்படும் என முதல்வர் அறிவித்த அறிவிப்பு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எந்தவித அரசாணையும் இல்லாமல் அம்மா உணகவங்களில் உள்ள ஜெயலலிதா புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குறியது எனக் கூறியுள்ளார். மீண்டும் ஜெயலலிதா புகைப்படத்தை அமைக்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM