சென்னை,
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட். இவர் திரைப்படத்துறையில் அறிமுகமாவதற்க்கு முன்பு 1970 களில் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். 1980ம் ஆண்டு வெளியான ஆல்டர்டு இஸ்டேட்ஸ் என்ற படத்தின் மூலம் திரைபடத்துக்கு அறிமுகமானார்.
இவர் கிஸ் ஆப் த ஸ்பைடன் வுமன், டார்க் சிட்டி, பிராட்காஸ்ட் நியூஸ், பிளாக் விடோ, எ ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் மார்வல் ஸ்டுடியோவின் பல படங்களிலும் நடித்துள்ளார். வில்லியம் ஹர்ட் கடைசியாக நடித்த தி கிங்க்ஸ் டாட்டர் படம் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்தது. தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து இருக்கிறார்.
இவர் 1985ல் வெளியான கிஸ் ஆப் தி ஸ்பைடர் வுமன் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வில்லியம் ஹர்ட் ஆஸ்கார் விருது பெற்றார்.
சில வாரங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வில்லியம் ஹர்ட் நேற்று மரணம் அடைந்தார்.
அவருக்கு 71 வயதான நிலையில் தனது பிறந்த நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவரது உயர் பிரிந்தது. வில்லியம் ஹர்ட் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.