திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் உள்ள அசன்சோல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சத்ருகன் சின்ஹாவையும் முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ பாலிகங்கேவை சட்டமன்ற இடைத்தேர்தலின் வேட்பாளராகவும் அறிவித்தார். பாபுல் சுப்ரியோ பாஜகவில் இருந்து விலகி, கடந்த ஆண்டு செப்டம்பரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சத்ருஹன் சின்ஹா இன்னும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை.
தேசிய அளவில் முழு வீச்சில் தலைவர்களைத் தேடும் திரிணாமூல் கங்கிரஸ்
யஷ்வந்த் சின்ஹா, சுஷ்மிதா தேவ் மற்றும் லூயிசின்ஹோ ஃபலேரோ போன்ற தேசியத் தலைவர்களுக்குப் பிறகு, நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சத்ருகன் சின்ஹா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக அவரைத் தேர்வு செய்துள்ளது. தேசிய அளவில் முன்னிலையில் உள்ள முக்கிய மற்றும் மூத்த தலைவர்களை கொண்டு வருவதன் மூலம், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தன்னை ஒரு உண்மையான தேசிய கட்சியாக காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலுவான எதிர்கட்சியாக நிலைநிறுத்துவதற்கு, அவர்களின் அனுபவத்தின் மூலம் கட்சி பலனடைய முயற்சி செய்கிறது.
மற்ற கட்சிகளிடம் இருந்து வலிமையானவர்களை ஈர்த்தல்
மேற்குறிப்பிட்ட தலைவர்களைப் போலவே, சத்ருகன் சின்ஹாவும் பாஜக முகாமில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் பாஜக தலைவர் ஆவார். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பீகாரில் உள்ள பாட்னா சாஹிப்பில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதே நேரத்தில், பாபுல் சுப்ரியோவும் முன்னாள் மத்திய அமைச்சராகவும் அசன்சோலில் இருந்து இரண்டு முறை பாஜக எம்.பியாக இருந்தார். இவர்களை கட்சி வேட்பாளர்களாக்கி மம்தா பானர்ஜி பாஜக மற்றும் காங்கிரஸிடம் இருந்து பலத்தைப் பெற்று தனிக்கட்சியை உருவாக்கி வருகிறார். இதைப் பின்பற்றினால் வெளியே இருப்பவர்களுக்கும் இதேபோன்ற வெகுமதிகள் வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி இதன் மூலமாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
நட்சத்திர சக்தி
2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மம்தா பானர்ஜி எப்போதும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் உள்ளவர்களுக்கு தேர்தலில் சீட்டுகளை வழங்கியுள்ளார். பெங்காலி நடிகர்கள், தபஸ் பால், சதாப்தி ராய், தேபஸ்ரீ ராய், பாலிவுட் சூப்பர் ஸ்டார் மிதுன் சக்ரவர்த்தி முதல் இளம் பெங்காலி சூப்பர் ஸ்டார் தேவ், மிமி சக்ரவர்த்தி, நுஸ்ரத் ஜஹான் வரை, திரிணாமூல் காங்கிரஸ் மேலிடம் எப்பொழுதும் முக்கியமான இடங்களுக்கான தேர்தல்களில் வெற்றிபெற நட்சத்திர பலத்தையே நம்பியிருக்கிறது. இந்த முறையும் அவர் மக்களவை இடைத்தேர்தலில் வெற்றிபெற சத்ருகன் சின்ஹாவின் நட்சத்திர பலத்தை நம்பியிருக்கிறார்.
இந்தி பேசும் வாக்காளர்களைத் கவர்வதற்கான உத்தி
அசன்சோல் மக்களவைத் தொகுதியில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள், பழைய பொருட்கள் வியாபாரிகள், சிறுபான்மை மக்கள் என கலப்வையான மக்கள் உள்ளனர். இங்கே வாக்காளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் இந்தி பேசுபவர்கள். எனவே, பிரபலமான சின்ஹா போன்ற வேட்பாளர் அவர்களுடன் இணைவதற்கு நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர். இதேபோல், பாலிகஞ்ச் சட்டமன்றத் தொகுதியிலும் கணிசமான அளவு பெங்காலி அல்லாத மக்கள் உள்ளனர். பாபுல் சுப்ரியோ பின்னணிப் பாடகர் என்ற அவருடைய இமேஜ் அவர்களின் ஆதரவைப் பெற வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“