இந்தியாவில் சுற்றுலாத் துறை மேம்பாட்டின் ஒரு பகுதியாக 5 லட்சம் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசிய மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, வரும்27 ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவதாகக் கூறினார். அவற்றில், முதல் 5 லட்சம் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய சுற்றுலா அலுவலகங்கள் மூலம் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் யுக்திகள் இணையதளங்களிலும் பரப்புரை செய்யப்பட்டு வருவதாகவும் ஜி.கிஷன் ரெட்டி கூறினார். மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிட 12 மொழிகளில் இலவச தகவல் தொடர்பு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM