ஜகார்த்தா : தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் அருகே உள்ள கடற்பகுதிகளில், நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்தோனேஷியாவில், மேற்கு சுமத்ரா மாகாணத்தின் பரியமன் நகருக்கு மேற்கே, கடற்பகுதியில், 16 கி.மீ., ஆழத்தில், நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில், இது, 6.7 என பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதேபோல், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தெற்கே அமைந்துள்ள ஆக்ஸிடென்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள லுபாங் தீவுக்கு மேற்கே, கடற்பகுதியில், 28 கி.மீ., ஆழத்தில், 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதுமில்லை என்பதுடன், சுனாமி குறித்த எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.
ஜகார்த்தா : தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் அருகே உள்ள கடற்பகுதிகளில், நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்தோனேஷியாவில், மேற்கு சுமத்ரா மாகாணத்தின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.