இந்தியாவைப் போலவே சீனாவும், கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரிக்கு அதிகப்படியாக வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருக்கிறது. இதனால் மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் தனது நாணய மதிப்பைக் குறைக்கும், அன்னிய செலாவணியை அதிகப்படியாக நிலக்கரிக்கு இழந்து வருகிறது.
இந்த நிலையை மாற்ற வேண்டுவது மட்டும் அல்லாமல் தனது உற்பத்தி துறையை வலிமையாக்க வேண்டும் என்பதற்காகச் சீனா அரசு மிக முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
அமெரிக்கா போனா என்ன, எங்ககிட்ட சீனா இருக்கு.. ரஷ்யாவின் முடிவு..!
சீன அரசு
சீன அரசு மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது, இதன் மூலம் சீனாவிலேயே அதிகப்படியான நிலக்கரியை உற்பத்தி செய்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை அளவுகளைக் குறைப்பது மட்டும் அல்லாமல் தனது குறுகிய காலப் பருவ நிலை இலக்கை அடையவும் திட்டமிட்டு உள்ளது.
நேஷ்னல் டெவலப்மெண்ட் அண்ட் ரிபார்ம் கமிஷன்
சீன அரசின் பொருளாதாரத் திட்டமிடல் அமைப்பான நேஷ்னல் டெவலப்மெண்ட் அண்ட் ரிபார்ம் கமிஷன் கடந்த வாரம் முக்கியமான நிலக்கரி சுரங்க பகுதிகள் மற்றும் அமைப்புகளுடன் நடத்திய முக்கியமான கூட்டத்தில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை 300 மில்லியன் டன் கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும் என்ற புதிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
நிலக்கரி உற்பத்தி
இதன் மூலம் அரசு, சுரங்க மற்றும் பயன்பாட்டாளர்கள் மத்தியில் நிலக்கரி இருப்பு 620 மில்லியன் டன் ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை அதிகளவில் உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல், ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை காரணமாக நிலக்கரி விநியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
சீனாவின் நிலக்கரி பயன்பாடு
உலகிலேயே மிகவும் மாசுபடுத்தும் புதை படிவ எரிபொருளான நிலக்கரி-யை நம்பி தான் சீனா தனது உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தைக் கட்டமைத்து உள்ளது உலகளாவிய நிலக்கரி விநியோகத்தில் 50 சதவீதத்திற்கும் அகிகமாகச் சீனா பயன்படுத்துகிறது. மேலும் நிலக்கரி உலகின் முன்னணி கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாளராகும்.
சீனாவின் திட்டம்
தற்போது சீனாவின் நேஷ்னல் டெவலப்மெண்ட் அண்ட் ரிபார்ம் கமிஷன் திட்டமிட்டு உள்ளதன் படி 150 மில்லியன் டன் நிலக்கரியை புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தளத்தில் இருந்தும், 150 மில்லியன் டன் நிலக்கரியை மூடப்பட்ட சில சுரங்கத்தில் இருந்தும், சில திறந்தவெளி உற்பத்தி தளத்தில் இருந்தும் உற்பத்தி செய் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒரு நாளுக்குச் சராசரியாக 12.6 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
லாபம்
உலகளவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த நிலக்கரியில் பெரும் பகுதியைச் சீனா கைப்பற்றும் நிலையில், தற்போது சீனா வருடத்திற்குக் கூடுதலாக 300 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்யும் நிலையில், அடுத்த சில மாதத்தில் நிலக்கரி விலை வேகமாகக் குறைய வாய்ப்பு உள்ளது. இது இந்தியா போன்று வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு நன்மை அளிக்கும்.
China plans to Cut Coal Imports With massive Mining target by NDRC
China plans to Cut Coal Imports With massive Mining target by NDRC இனி யாருடைய உதவியும் தேவையில்லை.. சீனாவின் புதிய நிலக்கரி உற்பத்தி திட்டம்..!