ஈராக்கில் தூதரகம் மீது ஏவுகணைகள் வீச்சு: அமெரிக்கா கடும் கண்டனம்

வாஷிங்டன்:
வடக்கு ஈராக் பகுதியில் உள்ள இர்பில் நகரில் புதிதாக நிறுவப்பட்ட அமெரிக்க தூதரகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது நேற்று ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டன.
இதில் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. தூதரகத்துக்கு அருகில் உள்ள டெலிவி‌ஷன் அலுவலக கட்டிடமும் பலத்த சேதமானது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
பக்கத்து நாடான ஈரானில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவும், ஈராக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
மிருகத்தனமான இந்த தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.