டெல்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர ஒன்றிய அரசு நிச்சயம் உதவும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார். ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். ‘ஆப்ரேசன் கங்கா’ திட்டத்தின் கீழ் இந்திய மாணவர்கள் அனைவரும் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர்.