உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் பலியாகிவிட்டதாகவும், மற்றொரு அமெரிக்கர் படுகாயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
உக்ரேனிய அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு ரஷ்யப் படைகளைக் குற்றம் சாட்டினர், ஆனால் இந்த தகவல் உறுதிபடுத்தப்படவில்லை, சூழ்நிலைகளும் தெளிவாக இல்லை. AFP செய்தியாளர்கள் அப்பகுதியில் சிறிய ஆயுதங்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களைக் கேட்டதாக கூறுகின்றனர்.
உக்ரைனின் இர்பினில், காரில் சென்றுக் கொண்டிருந்தபோது ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்தார் என்று மருத்துவர்கள் மற்றும் சாட்சிகளை மேற்கோள் காட்டி AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | உக்ரைன் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
அமெரிக்கர்கள் சென்ற காரில் இருந்த உக்ரேனியர் ஒருவரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
பத்திரிக்கையாளரை பலி வாங்கிய துப்பாக்கிச் சூட்டுக்கு ரஷ்யப் படைகளை, உக்ரேனிய அதிகாரிகள் குற்றம் சாட்டினாலும் தெளிவான தகவல்கள் வரவில்லை. AFP செய்தியாளர்கள் அப்பகுதியில் சிறிய ஆயுதங்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களைக் கேட்டனர்.
இறந்தவரின் சடலத்தை தனது செய்தியாளர்கள் பார்த்ததாக AFP செய்தி நிறுவனம் கூறியது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களில் ஒருவர் உடனடியாக இறந்துவிட்டார் என்றும், மற்றொருவருக்கு சிகிச்சை அளித்ததாகவும் உக்ரேனிய பிராந்திய பாதுகாப்பிற்காக தன்னார்வத் தொண்டு செய்யும் அறுவை சிகிச்சை நிபுணர் டானிலோ ஷபோவலோவ் தெரிவித்தார்.
மேலும் படிக்க | தடாலடியாக நுழைந்த ரஷ்ய வீரர்கள்! விரட்டி அடித்த உக்ரைன் ஜோடி
பாதிக்கப்பட்டவரின் உடலை இர்பினில் உள்ள அதன் செய்தியாளர்கள் பார்த்ததாக AFP கூறியது.
“கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் இரண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் உக்ரேனியர் ஒருவரும் இருந்தனர,” என்று ஷபோவலோவ் AFP இடம் கூறினார்.
“எங்கள் நாட்டை சேர்ந்தவரும், ஒரு அமெரிக்க பத்திரிகையாளரும் காயமடைந்துள்ளனர், நான் அவர்களுக்கு முதலுதவி செய்தேன், காரில் இருந்த மற்றொரு பத்திரிக்கையாளருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது, அவர் உடனடியாக இறந்தார்” என்று ஷபோவலோவ் கூறுகிறார்.
அமெரிக்க நிருபரிடம் இருந்த ஆவணங்களின் அடிப்படையில் அவர் நியூயார்க்கைச் சேர்ந்த வீடியோ ஆவணப்படம் எடுக்கும் 50 வயதான பிரென்ட் ரெனாட் என அடையாளம் கண்டுள்ளது.
மேலும் படிக்க | தண்ணீர் ஊற்றி வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் உக்ரைன் வீடியோ
நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் அடையாள அட்டை ஒன்றும் இறந்தவரிடம் இருந்தது என்பதால், அவர் அந்த பத்திரிக்கையில் பணிபுரிந்தார் என்று செய்திகள் வந்தன. ஆனால் தற்போது, அதாவது இறக்கும் போது பிரென்ட் ரெனாட், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைகாக வேலை செய்யவில்லை என்று அமெரிக்க நாளிதழ் கூறியது.
“ப்ரெண்ட் ஒரு திறமையான புகைப்படக் கலைஞர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார், அவர் பல ஆண்டுகளாக நியூயார்க் டைம்ஸுக்கு பங்களித்தார்” என்று அந்தப் பத்திரிக்கையின் துணை நிர்வாக ஆசிரியர் கிளிஃப் லெவி ட்வீட் செய்த ஒரு அறிக்கை கூறியது.
“அவர் கடந்த காலத்தில் (மிக சமீபத்தில் 2015 இல்) தி டைம்ஸுக்கு பங்களித்திருந்தாலும், உக்ரைனில் உள்ள தி டைம்ஸில் அவர் பணியமர்த்தப்படவில்லை” என்று நியூயார்க் டைம்ஸ் தெளிவுபடுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | உக்ரைன் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், தயார் நிலையில் தைவான் ராணுவம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR