காதல் கணவரான நடிகர் தனுஷை பிரிந்த பிறகு
ஐஸ்வர்யா
இயக்கத்தில் இறங்கியுள்ளார். முசாஃபிர் ஆல்பத்திற்காக ஹைத்ராபாத் சென்றபோதுதான் இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வந்தார் ஐஸ்வர்யா. பின்னர் 2 வார தனிமைப்படுத்தலுக்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்பினார்.
ப்ளீஸ் அண்ணி… ‘அதை’ மட்டும் பண்ணுங்க… ஐஸ்வர்யாவிடம் கெஞ்சும் தனுஷ் ரசிகர்கள்!
இந்நிலையில் கடந்த வாரம் ஐஸ்வர்யாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் நர்ஸ்களுடன் ஐஸ்வர்யா மகளிர் தினத்தை கொண்டாடிய போட்டோக்கள் வெளியானது.
தற்போது மீண்டும் ஆல்பத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகளில் தீவிரமாக உள்ள ஐஸ்வர்யா நேற்று இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸை சந்தித்தார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஐஸ்வர்யா.
நயன்தாராவுக்கு ரகசியமாக திருமணம் முடிந்ததா? வகுட்டில் குங்குமத்துடன் வைரலாகும் வீடியோ!
அந்த போட்டோக்களில் அவர் கைகளில் ட்ரிப்ஸ் மற்றும் இன்ஜெக்ஷனுக்கான செரின் உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆச்சு மேடம்… ஓய்வெடுங்கள் உங்கள் கையில் இன்ஜெக்ஷனுக்கான செரின் உள்ளதே என்று கவலையுடன் விசாரித்து வருகின்றனர்.
இதன் மூலம் ஐஸ்வர்யா இன்னமும் முழு குணமடையவில்லை என தெரிகிறது. ஏற்கனவே தனது கணவரை பிரிந்த சோகத்தில் உள்ள ஐஸ்வர்யாவுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஐஸ்வர்யாவுக்கு உடல்நிவை சரியில்லை என்றதும் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி முதல் நபராக அவரை நலம்பெற வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
எனக்கு நம்பிக்கையே இல்ல..என் மனச மாத்தீட்டாங்க – மதன் கார்க்கி Open Talk!