ராம்நகர், : ”அலிபாபா 40 திருடர்கள் போன்று பரவியுள்ளனர். என் தொகுதிக்கு வர அனுமதி பெற வேண்டுமா,” என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வியெழுப்பினார்.ராம்நகரில் அவர் நேற்று கூறியதாவது:அலிபாபா 40 திருடர்கள் போன்று, தொகுதியில் பரவியுள்ளனர். மக்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதால், அவர்களின் பாதுகாப்புக்காக நான் தொகுதிக்கு வந்துள்ளேன். நாங்கள் யாருடைய சொத்துகளையும் கொள்ளையடிக்க வரவில்லை.
யார், யாரின் நிலத்தை யோகேஸ்வர், எழுதி வாங்கியுள்ளார் என்பது தெரியும். பொய்யான ஆவணங்களை உருவாக்கி, நிலத்தை எழுதி வாங்கியுள்ளார். எவ்வளவு ஆவணங்கள் வேண்டும் என கூறுங்கள். விதான்சவுதாவில் சில ஆவணங்களை வெளியிடுகிறேன்.எம்.பி., சுரேஷ் தேவையின்றி சீண்ட வேண்டாம். என்னைப்பற்றி கூற அவர் யார்.
இவரது பின்னணி தெரியாதா. கண்டவர்களின் நிலத்தை கொள்ளையடிப்பது, கடத்துவது, மிரட்டி கையெழுத்து பெறுவது போன்ற செயல்களை, நான் என் வாழ்வில் செய்யவில்லை.பணம் தாகத்தால், எத்தனை விவசாயிகளின் குடும்பங்களை பாழாக்கினார். நிலத்தை ஆக்கிரமித்து, பாறைகளை உடைத்து வெளிநாட்டுக்கு அனுப்பினார். இப்படிப்பட்டவரிடம் நான் பாடம் கற்க வேண்டியதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement