புதுடெல்லி:
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, 92 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. முதல்வராக பகவந்த் மான் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்.
கடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலம் சங்ரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆக பொறுப்பேற்ற பகவந்த் மான், தற்போது பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தூரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நாளை முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், தனது எம்.பி. பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
இன்று பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பகவந்த் மான், சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.