30.9.2021 தேதிப்படி எல்ஐசி நிறுவனத்திடம் உரிமை கோரப்படாத 21 ஆயிரத்து 538 கோடி ரூபாய் கையிருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய நிதித்துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது அதுமட்டுமில்லாமல் மேற்கூறிய தொகையின் வட்டியின் மூலமாக சுமார் 2911 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உரிமை கோரப்படாத பணத்திற்கு உரியவர்கள் அடுத்த 25 ஆண்டுகள் வரை அந்த தொகையின உரிமை கோருவதற்கு தகுதி உடையவர்கள் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM