ஏர் இந்தியா-வின் புதிய சேர்மன்.. என்.சந்திரசேகரனுக்கு வந்த புதிய பொறுப்பு..!

டாடா குழுமத்தின் வரலாற்றிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் காலகட்டமாக தற்போது பார்க்கப்படும் நிலையில், என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் கடந்த சில வருடங்களாகப் பல துறையில் வேகமாக வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. சமீபத்தில் டாடா ஸ்டீல் தனது உற்பத்தியை இரண்டு மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்து அதற்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

இந்நிலையில் டாடா குழுமத்திற்குத் திரும்பி வந்துள்ள முக்கியமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்திற்குப் புதிய சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராகத் துருக்கி ஏர்லையன்ஸ் இல்கர் ஆய்சி பெயரை அறிவிக்கப்பட்ட நிலையில் என்.சந்திரசேகரன் முயற்சி தோல்வி அடைந்தது.

இதற்கிடையில் ஏர் இந்தியாவின் புதிய சேர்மனாகப் பொறுப்பேற்றுள்ளார் தமிழரான சந்திரசேகரன்.

ஒரு துருக்கிக் காரர் ஏர் இந்தியாவின் CEO-வா.. வேண்டவே வேண்டாம்.. வலுத்த எதிர்ப்பு..!

 என்.சந்திரசேகரன்

என்.சந்திரசேகரன்

டாடா குழுமம் சுமார் 69 ஆண்டுகளுக்குப் பின்பு மத்திய அரசிடம் இருந்து கைப்பற்றிய ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய சேர்மன் ஆகத் தமிழரான என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் ஏர் இந்தியா சேர்மன் ஆக என்.சந்திரசேகரன் நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்

ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்

மேலும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஆலிஸ் ஜீவர்கீஸ் வைத்தியனும், குழுவில் இண்டிபெண்டென்ட் இயக்குநராக நியமிக்கப்படவும் ஏர் இந்தியா நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

 டாடா நிர்வாகக் குழு
 

டாடா நிர்வாகக் குழு

ஏர் இந்தியா-வை டாடா குழுமம் கைப்பற்றினாலும் உயர் அதிகாரிகள் இன்னும் நியமிக்கப்படாமல் நிர்வாகக் குழு மட்டுமே நியமிக்கப்பட்டு வர்த்தகம் மற்றும் சேவைகளை அளிக்கப்பட்டு வருகிறது. டாடா குழுமம் ஏர் இந்தியாவில் அமைத்துள்ள நிர்வாகக் குழு இந்நிறுவனத்தில் பல மாற்றங்களைச் செய்துள்ளது.

 புதிய சிஇஓ

புதிய சிஇஓ

ஏர் இந்தியாவின் புதிய சிஇஓ-வாகச் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டதன் மூலம் ஏர் இந்தியாவின் புதிய சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் நியமிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் சந்திரசேகரன் தலைமையிலான ஏர் இந்தியா நிர்வாகம் புதிய சிஇஓ பெயரை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சேர்மன் பதவி

சேர்மன் பதவி

என். சந்திரசேகரன் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மனாக இருப்பது மட்டும் அல்லாமல் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ், இந்தியன் ஹோட்டல் கோ, டாடா பவர், ஜாகுவார் லேண்ட் ரோவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களின் சேர்மன் ஆகவும் இருக்கிறார்.

 3 நிறுவனங்கள்

3 நிறுவனங்கள்

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் டாடா குழுமத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட 3 நிறுவனங்களான ஏர் இந்தியா, டாடா டிஜிட்டல் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களைச் சந்திரசேகரன் நேரடி நிர்வாகத்திற்குக் கீழ் கொண்டு வர மத்திய கார்பரேட் விவகார அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், இன்று ஏர் இந்தியா சேர்மன் ஆகச் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata Sons’ Chief N Chandrasekaran Appointed Air India Chairman

Tata Sons’ Chief N Chandrasekaran Appointed Air India Chairman ஏர் இந்தியா-வின் புதிய சேர்மன்.. என்.சந்திரசேகரனுக்கு வந்த புதிய பொறுப்பு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.