கனடாவில் உணவகத்துக்குச் சென்ற ஒருவரிடம் நூதன முறையில் கொள்ளயடிக்கப்பட்டுள்ளது.
வான்கூவரில் வாழும் Changqing Yu என்பவர், சென்ற வாரம், Richmondஇலுள்ள Tian Shi fu என்ற உணவகத்துக்குச் சென்றுள்ளார்.
தனது காரை பார்க் செய்துவிட்டு, நடக்க முயன்ற Changqingஇடம், அருகில் நின்ற ஒரு காரில் இருந்த பெண் ஒருவர் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டுள்ளார்.
Changqing தனக்கு ஆங்கிலம் தெரியாது என மாண்டரின் மொழியில் கூற, அந்த பெண் தொடர்ந்து ஏதேதோ கேட்டுள்ளார். உடனே அந்த காருக்கு அருகில் சென்ற Changqing, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை என்று கூற, சட்டென Changqingஇன் கையைப் பிடித்த அந்தப் பெண், அவரது கையை இறுகப் பற்றிக்கொண்டு, அவரது கையில் நெக்லஸ் ஒன்றை அணிவிக்க முயன்றிருக்கிறார்.
எனக்கு அது வேண்டாம் என்று Changqing கூற, அந்தப் பெண் அவரது கையை மேலும் இறுக்கமாகப் பிடித்து தனக்கு அருகே இழுத்திருக்கிறார்.
அப்போதுதான் தன் கையில், அணிந்திருந்த 45,000 டொலர்கள் மதிப்புடைய ரோலக்ஸ் கைக்கடிகாரம் தனது கையிலிருந்து நழுவுவதைக் கவனித்துள்ளார் Changqing.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பெண் அந்த வாட்சை பறித்துக்கொள்ள, சாரதி இருக்கையில் அமர்ந்திருந்த நபர் உடனே வேகமாக அங்கிருந்து காரை நகர்த்திச் சென்றுள்ளார்.
கைக்கடிகாரத்தை இழந்த Changqing, பொலிசாரிடம் அது குறித்து புகாரளித்துள்ள நிலையில், Richmondஇலுள்ள உணவகத்துக்குச் செல்வதால் தனக்கு 45,000 டொலர்கள் இழப்பு ஏற்படும் என தான் கனவிலும் நினைக்கவில்லை என்கிறார்.
பொலிசார் இந்த நவீன திருட்டு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.