கர்நாடகாவில் வெப்பம் அதிகரிப்பு 30 டிகிரி செல்ஷியஸ் தாண்டியது| Dinamalar

பெங்களூரு, : கர்நாடகாவில், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கோடைக்காலம் துவக்கத்திலேயே, கர்நாடகாவில் வெப்பநிலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. பொதுவாக மார்ச் முதல் மே வரை, கோடைக்காலம் இருக்கும். இம்முறை அதிகமான வெப்பம், மக்களை வாட்டி வதைக்கிறது. காலை 8:00 மணிக்கே, வெயில் சுடுகிறது.

ஷிவமொகா, கொப்பால், கலபுரகி, கார்வார், மாண்டியா, தாவணகரேவில், 35 டிகிரி செல்ஷியசை தாண்டி; கதக், விஜயபுரா, ஹாவேரி, சித்ரதுர்கா, மைசூரில் 32 டிகிரி செல்ஷியஸ்; பெங்களூரு, தார்வாட், விஜயபுரா, பீதர், மங்களூரு விமான நிலையத்தில், 33 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை உள்ளது.பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும், வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் தாண்டியுள்ளது. அடுத்த மூன்று நாட்களில், வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துஉள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.