இறக்குமதி செய்த கார் தொடர்பான வழக்கில் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வணிக வரித்துறை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
2005ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ. காருக்கு, 2019ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் படி, விஜய் நுழைவு வரியாக 7 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலுத்தினார். இந்நிலையில், வரி செலுத்தாத காலத்திற்கு அபராதமாக 30 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த விஜய், இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2% என கணக்கிட்டு அபராதம் விதிக்க வேண்டுமெனவும், ஆனால் தனக்கு 400% அபராதமாக விதிக்கப்பட்டதாக மனுவில் தெரிவித்தார்.
இதே போன்ற கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், 2008ல் இறக்குமதி செய்த காருக்கு வரி செலுத்தக்கோரி 2021 தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டுமென்றும் மனுவில் குறிப்பிட்டார்.