கொரோனா இழப்பீடு பெற போலி ஆவணம் சமர்பிப்பு- சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வேதனை!

புதுடெல்லி,
கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ்கள் தரப்படுவதாக வரக்கூடிய தகவல் வருத்தம் அளிக்கிறது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்ததாவது,
நமது ஒழுக்கம் இவ்வளவு தூரம் தாழ்ந்து போகும் என நினைக்கவில்லை. கொரோனா இழப்பீடு பெற போலி ஆவணம் தருவது பற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டியது அவசியமாகிறது.
கொரோனாவால் இறந்தோரின்  ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு தர உத்தரவிட்டோம். ஆனால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ரு.50 ஆயிரம் இழப்பீடு தர சொல்லவில்லை.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்ற விசாரணையில் நீதிபதிகள் எம் ஆர் ஷா மற்றும் பி வி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு,  “மருத்துவர்களால் போலி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை எவ்வாறு தடுப்பது என்பதை தயவுசெய்து தெரிவிக்கவும். இது ஒருவரின் உண்மையான வாய்ப்பைப் பறிக்கலாம்” என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்து இந்த வழக்கு விசாரணையை இன்று ஒத்தி வைத்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் நடைபெற்ற விசாரணையில், இது குறித்து சிஏஜி விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.