Former Minister SP Velumani Oyilattam dance video goes viral: கோவையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கணியூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கி, வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரவு கோவிலில் அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏவுமான எஸ்.பி. வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர், கோவில் திருவிழாவில் கொங்கு பகுதியில் பிரசித்தி பெற்ற ஒயிலாட்டம் நடைபெற்றது. குழந்தைகள், இளம்பெண்கள் என ஒரே மாதிரியான உடை அணிந்து வண்ணமயமாக அவர்கள் ஆடிய ஆட்டம் காண்போரை கவர்ந்தது. இதில் ஒயிலாட்ட நடன குழுவினருடன் இணைந்து எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடினார் . இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் ஒயிலாட்டம் ஆடுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோதே கோயில் திருவிழாக்களில் நடனமாடியுள்ளார். அதேபோல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியும் கோயில் திருவிழாக்களில் சிறப்பாக ஒயிலாட்டம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: 144 தடை மீறல் : இயக்குநர் கௌதமன் தூத்துக்குடியில் கைது
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அண்ணனின் ஆட்டம் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர், கோவில் கலாச்சார நிகழ்வு அருமை அமைச்சராக இருந்த என்ன கடவுள் முன் பக்தர் என்பதற்கு இது ஒரு உதாரணம் என பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், நம் இந்திய திருநாட்டின் சிறப்பே இதுதான் பிரதமர் முதல் அமைச்சர் பெருமக்கள் என அனைவரும் சிறந்த கலை திறன் மிக்கவர்களாக இருக்கின்றனர் என பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், அவரும் மனிதன் தானே ஒரு மனிதனுக்கு இந்த ஆசைகள் கூடவா இருக்க கூடாது ……. என பதிவிட்டுள்ளார்
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“