சென்னை: கோவை வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்த வழக்கில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மறைமுக தேர்தலுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.