முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது புழுதி வாரி வீசுவதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எத்தனையோ அவதூறு பேட்டிகளை ஜெயக்குமார் கொடுத்தாலும், அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை என்பது திமுக தலைவர் காட்டிய பெருந்தன்மை எனக் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசைப் பார்த்து சகிப்புத்தன்மையற்ற அரசு என ஜெயக்குமார் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, அராஜகத்தில் ஈடுபடும்போது சட்டத்தின் ஆட்சிதான் அவரைக் கைது செய்ததே தவிர, திமுகவோ அதன் தலைவரோ இல்லை என்பதை ஜெயக்குமார் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM