தென்னிந்திய அளவில் மிகச் சிறந்த நடிகையாக கலக்கி கொண்டுள்ளவர் நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான
பிரேமம்
படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு இப்பொழுது தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள சாய்பல்லவியை கல்யாணம் செய்து கொள்ள இந்த தகுதிகள் மட்டும் இருந்தால் போதும் என அவரே கூறியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி.அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்த பிரேமம் மலையாள மொழியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ் நாட்டிலும் இந்த படம் மிகப்பெரிய வசூலை அள்ளியது.
மறுமணத்துக்கு ரெடி.. ஆனா, மூனு கண்டிஷன் இருக்கு: டி. இமான்..!
பின் தெலுங்கில் பிரேமம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி தெலுங்கிலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.பிரேமம் படத்திற்கு பிறகு
சாய்பல்லவி
மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்கத் தொடங்கினார். தெலுங்கில் வருண் தேஜாவுடன் இணைந்து நடித்த ஃபிடா மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன்பிறகு தெலுங்கு ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் மாறிய சாய் பல்லவி இப்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்.
முன்னணி நடிகையாக ஆக வேண்டும் என்றால் கவர்ச்சி காட்ட வேண்டும் என்ற ரூலை உடைத்தெறிந்து திறமையின் மூலமும் முன்னணி நாயகியாக வரலாம் என நிரூபித்து காட்டிய சாய்பல்லவி நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்தில் மிகச் சிறந்தவர். தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தமிழில்
மாரி
,
என்ஜிகே
உள்ளிட்ட படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
காதல் படங்கள் மட்டுமல்லாமல் சவாலான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வரும் சாய்பல்லவி சமீபத்தில் தெலுங்கில் வெளியான
ஷ்யாம் சிங்கா ராய்
என்ற படத்தில் தேவதாசியாக வாழ்ந்து காட்டியது அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெற்றது. விராட பருவம் என்ற படத்தில் போராளியாக நடித்து வரும் சாய் பல்லவி தற்பொழுது தனக்கு வரப்போகும் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என
நேர்காணல்
ஒன்றில் பேசியுள்ளார் .
பெண்கள் பொதுவாக தங்களுக்கு வரவேண்டிய கணவர் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற பல கனவு இருக்கும் ஆனால் நடிகை சாய் பல்லவியோ அப்படி பெரிதாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்ல குணம், எனக்காக நேரம் ஒதுக்கும் வேலை செய்பவராக இருந்தால் மட்டும் போதும். என்னை விட உயரத்தில் கொஞ்சம் கூடுதலாக இருத்தல் வேண்டும். மற்றபடி மொழி, இனம், கலர் என எந்த ஒரு தகுதியும் தேவையில்லை என தனக்கு கணவராக வருபவரின் தகுதிகள் குறித்து சாய்பல்லவி பேசியதை பார்த்த நம்ம பசங்க இப்பொழுது வெயிட்டிங்கில் மாலையுடன் நிற்கின்றனர்.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!