சாலைகளில் அபாய பைக் சாகசம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய சிபாரிசு| Dinamalar

மங்களூரு : வாகனங்கள் இயங்கும் பரபரப்பான சாலையில் பைக்கில் சாகசம் செய்து, ஹீரோக்களாக முயற்சித்த ஏழு இளைஞர்களை, மங்களூரு போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓட்டுனர் உரிமம் கிடைக்காமல் செய்யும்படி, ஆர்.டி.ஓ.,வுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.தட்சிண கன்னடா மங்களூரு நகரில் சில இளைஞர்கள் வாகனங்கள் இயங்கும் பரபரப்பான சாலைகளில், வீலிங் செய்வது, சாகசங்கள் செய்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் செய்திருந்தனர்.

இவர்களின் உயிருக்கு மட்டுமின்றி, பொது மக்களுக்கும் தொந்தரவு கொடுத்துள்ளனர்.’வாட்ஸ் ஆப்’ குரூப்பில், அபாயகரமான பைக் சாகச வீடியோக்கள் பரவியது. இதை கவனித்த மங்களூரு தெற்கு போக்குவரத்து போலீசார் தாமாக வழக்கு பதிவு செய்தனர்.அந்தந்த சாலைகளின் கண்காணிப்பு கேமரா, வீடியோ அடிப்படையில், அபுபக்கர சித்திக், தவுசிப் அகமது, முகமது சப்வான், முகமது அனிஸ், முகமது சோஹாலி, இலியாஸ், கிஷன் குமார் ஆகியோரை கண்டுப்பிடித்து கைது செய்தனர்.இவர்களுடன் ஒரு சிறுவனிடமும் விசாரணை நடத்தினர். தனித்தனியாக நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளது. ஐந்து பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.இலியாஸ் மங்களூரு புறநகரில் தொக்கோட்டு மேம்பாலத்திலிருந்து, உள்ளாலமைலு வரை, ‘பைக்’ சாகசம் செய்தார்.மூவர் ஒரே பைக்கில் அதிவேகமாக சென்று, சாகசம் செய்து, மற்ற வாகனங்களுக்கும், பாதசாரிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தினர்.இந்த இளைஞர்களுக்கு, வாழ்நாள் முழுவதும், ஓட்டுனர் உரிமம் கிடைக்காமல் செய்யும்படி, ஆர்.டி.ஓ.,வுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.