இணைய வர்த்தக நிறுவனமான Flipkart அவ்வப்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக சலுகை விலை விற்பனை நாள்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ‘Big Savings Days Sale’ என்ற தள்ளுபடி விற்பனை தினங்களை மார்ச் 12 அன்று தொடங்கியுள்ளது.
மார்ச் 16ஆம் தேதியுடன் நிறைவடையும் இந்த தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப பல பொருள்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில், திறன் வாய்ந்த Laptop-களின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, லேப்டாப் வாங்க காத்திருப்போருக்கு இது ஏற்ற தருணமாக அமையலாம்.
தள்ளுபடி விலை மட்டுமல்லாமல், வங்கிக் கடன் அட்டைகள் மீது கூடுதல் சலுகையும் அழிக்கப்படுகிறது.
SBI Credit Card
வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, கூடுதலாக 10% விழுக்காடு வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, சலுகை விலையில் உள்ள சிறந்த லேப்டாப்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.
அமேசானுடன் ஹோலி கொண்டாட்டம் – Holi Shopping Store சலுகைகள் உங்களுக்காக!
ஏசர் அஸ்பயர் 7 (acer Aspire 7 A715-42G Gaming Laptop)
எடிட்டிங், கேமிங் என அனைத்து விதமான வேலைகளுக்கும் இந்த லேப்டாப் சிறந்தாக இருக்கும். 15.6″ ஐபிஎஸ் எல்இடி Backlit எல்சிடி டிஸ்ப்ளே, Ryzen 5 Hexa Core 5500U புராசஸர், 8ஜிபி DDR4 ரேம் / 32ஜிபி வரை நீட்டிக்கலாம், 512 GB SSD ஸ்டோரேஜ் மெமரி, விண்டோஸ் 10 இயங்குதளம், 4 GB NVIDIA GeForce GTX 1650 டெடிகேட்டட் கிராபிக்ஸ் கார்டு ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளது.
மேலும், ப்ளூடூத் v5.1, Backlit Keyboard, டைப்-சி ஆதரவு போன்ற பவர் பேக்ட் அம்சங்களை இந்த ஏசர் லேப்டாப் கொண்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் இதன் விலை
ரூ.54,940
ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. இதே Intel Core i5 10th Gen புராசஸர் கொண்டிருக்கும் ஏசர் அஸ்பயர் 7 லேப்டாப்பின் சலுகை விலை
ரூ.50,940
ஆக உள்ளது.
எச்பி 14எஸ் (HP 14s-fq1092au)
காம்பேக்ட் விரும்பிகளுக்கு இந்த லேப்டாப் சிறந்ததாக இருக்கும். 14″ அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, Ryzen 5 Hexa Core 5500U புராசஸர், 8ஜிபி DDR4 ரேம், 512 GB SSD ஸ்டோரேஜ் மெமரி, விண்டோஸ் 10 இயங்குதளம், ப்ளூடூத் v4.2, Backlit Keyboard, டைப்-சி ஆதரவு போன்ற அம்சங்கள் இந்த எச்பி 14எஸ் லேப்டாப்பில் உள்ளன. இதன் விலை பிளிப்கார்ட் தளத்தில்
ரூ.49,949
ஆக உள்ளது.
எம்.எஸ்.ஐ மாடர்ன் 14 (MSI Modern 14 B10MW-639IN Notebook)
கேமிங் மடிக்கணினிகளுக்கு என பெயர் பெற்ற லேப்டாப் நிறுவனமான MSI, குறைந்த விலை லேப்டாப்களை கூடுதல் அம்சங்களுடன் வெளியிடுகிறது. இந்த லேப்டாப்பில் Intel Core i5 10 gen புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8ஜிபி DDR4 ரேம், 512 GB SSD ஸ்டோரேஜ் மெமரி ஆகிய அம்சங்கள் உள்ளது.
இதில் 14″ 60Hz ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளம், ப்ளூடூத் v5.1, Backlit Keyboard, டைப்-சி ஆதரவு, ராணுவ தர கட்டமைப்பு போன்ற மேம்பட்ட அம்சங்கள் உள்ளது. இதன் விலை Flipkart Shopping தளத்தில்
ரூ.49,940
ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.
கேமர்களின் தாகம் தணிக்க வரும் மலிவான Asus Gaming லேப்டாப்ஸ்!
நோக்கியா ப்யூர்புக் எக்ஸ்14 (Nokia PureBook X14 NKi510UL85S)
இந்த லேப்டாப்பில் எடை வெறும் 1.1 கிலோ தான். இந்த விலையில் வேறெந்த லேப்டாப்பிலும் இல்லாத கட்டமைப்பு இதில் உள்ளது. மெக்னீசியம் மற்றும் அலுமினியம் ஆகிய உலோகங்கள் கொண்டு இந்த லேப்டாப் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், 14″ அங்குல ஐபிஎஸ் எல்இடி Backlit எல்சிடி டிஸ்ப்ளே, Intel Core i5 10 gen புராசஸர், 8ஜிபி DDR4 ரேம் / 16ஜிபி வரை நீட்டிக்கலாம், 512 GB SSD ஸ்டோரேஜ் மெமரி, விண்டோஸ் 10 இயங்குதளம், ப்ளூடூத் v5.1, Backlit Keyboard, டைப்-சி ஆதரவு போன்ற பவர் பேக்ட் அம்சங்களை இந்த நோக்கியா லேப்டாப் கொண்டுள்ளது.
இந்த லேப்டாப்பில் டால்பி அல்மாஸ் தரத்திலான ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் இதன் விலை
ரூ.48,940
ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.
லெனோவா ஐடியாபேட் 3 (Lenovo IdeaPad 3 15ITL6 Thin and Light Laptop)
இதில் 15.6″ ஐபிஎஸ் எல்இடி Backlit எல்சிடி டிஸ்ப்ளே, Intel i3 11th Gen புராசஸர், 8ஜிபி DDR4 ரேம், 256 GB SSD ஸ்டோரேஜ் மெமரி, விண்டோஸ் 11 இயங்குதளம், Backlit Keyboard, டைப்-சி போன்ற அம்சங்கள் உள்ளது.
Asus விவோபுக் 2 இன் 1 லேப்டாப் அறிமுகம் – அனைத்து டாஸ்குகளும் இனி ஈஸி தான்!
பிளிப்கார்ட் தளத்தில் இதன் விலை
ரூ.39,940
ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. வீடியோ எடிட்டிங், கேமிங் தவிர்த்து அனைத்து விதமான சாதாரண வேலைகளை மேற்கொள்ளும் பயனர்களுக்கு இந்த லேப்டாப் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.
இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 (Infinix INBook X1 XL11)
இதில் 14″ ஐபிஎஸ் எல்இடி Backlit எல்சிடி டிஸ்ப்ளே, Intel i3 10th Gen புராசஸர், 8ஜிபி DDR4 ரேம், 256 GB SSD ஸ்டோரேஜ் மெமரி, விண்டோஸ் 11 இயங்குதளம், Backlit Keyboard, டைப்-சி போன்ற அம்சங்கள் உள்ளது.
பிளிப்கார்ட் தளத்தில் இதன் விலை
ரூ.32,940
ஆக உள்ளது. வீடியோ எடிட்டிங், கேமிங் தவிர்த்து அனைத்து விதமான பணிகளை மேற்கொள்ள இந்த லேப்டாப் சிறந்ததாகும்.
இந்த லேப்டாப்புகள் அனைத்திலும் வெப் கேமரா வசதி உள்ளது. மேலும், பட்டியலில் உள்ள அனைத்து மடிக்கணினிகளும் டைப்-சி ஆதரவை பெற்றுள்ளன. அதுமட்டுமில்லாமல் எடை போன்ற அனைத்து கட்டமைப்புகளையும் ஆராய்ந்து இந்த பட்டியல் பயனர்களுக்காக தயார் செய்யப்பட்டது.
நீங்கள் வைத்திருக்கும் லேப்டாப் எது? பட்டியலில் உள்ள மடிக்கணினிகளில் உங்கள் தேர்வு எதுவாக இருக்கும்? கீழே உள்ள கருத்து பெட்டியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.