முல்கேம் அன்டெர் ரூ,
ஜெர்மன் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள முல்கேம் அன்டெர் ரூ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் மற்றும் குன்லாவுட் விடிட்சர்ன் (தாய்லாந்து) மோதினர்.
இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென் 18-21, 15-21 என்ற நேர் செட்டில் குன்லாவுட் விடிட்சர்னிடம் தோற்று கோப்பையை தவறவிட்டார். இருப்பினும் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. முன்னதாக லக்ஷயா சென் அரைஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென்னை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.