மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகத்தில் ஆசியச் சந்தையில் ஏற்பட்ட சரிவைச் சமாளித்து உயர்வுடன் துவங்கியுள்ளது. ஆனால் சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் பணவீக்கம், நாணய மதிப்பைச் சரி செய்ய வட்டி உயர்வை முக்கியமான கருவியாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த வாரம் பல நாடுகளில் மத்திய வங்கி நாணய கொள்கை கூட்டம் நடக்க உள்ள நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் உஷாராக முதலீடு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகம் அதிகப்படியான தடுமாற்றத்துடன் துவங்கினாலும் 250 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது.
Mar 14, 2022 10:30 AM
ரிசர்வ் வங்கி HDFC வங்கி மீது இருந்த அனைத்து தடை, கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது
Mar 14, 2022 10:30 AM
HDFC வங்கியின் 2.0 திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது
Mar 14, 2022 10:30 AM
சர்வதேச சந்தையில் தங்கம் விலை 0.4 சதவீதம் சரிந்து ஒரு அவுன்ஸ் 1977.1 ஆக உள்ளது
Mar 14, 2022 10:30 AM
Paytm பேமெண்ட்ஸ் பேங்க்: புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை விதித்த ஆர்பிஐ..!
Mar 14, 2022 10:28 AM
ஜூம்லியன்ட் புட்வொர்க்ஸ் சிஇஓ பிபதிக் போட்டா ராஜினாமா செய்த காரணத்தால் இந்நிறுவன பங்குகள் 10 சதவீதம் வரையில் சரிவு
Mar 14, 2022 10:28 AM
சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான shenzhen-ல் கொரோனா தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது
Mar 14, 2022 10:28 AM
சீனாவில் சுமார் 18 மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது
Mar 14, 2022 10:26 AM
சீனா shenzhen-ல் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் குறைந்தது ஒரு வாரமாவது நடைமுறையில் இருக்கும்
Mar 14, 2022 10:25 AM
சீனாவில் கொரோனா தொற்று தொடர்ந்து 4வது நாளாக அதிகரித்து வருகிறது
Mar 14, 2022 10:23 AM
சீனாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து வருகிறது
Mar 14, 2022 10:20 AM
ரஷ்யா – உக்ரைன் இன்று பேச்சுவாரத்தை நடத்துவதால் தங்கம், வெள்ளி விலை சரிவு
Mar 14, 2022 10:19 AM
பேடிஎம் பங்குகள் புதிய 52 வார சரிவை தொட்டது
Mar 14, 2022 10:19 AM
பேடிஎம் பங்குகள் 13.3 சதவீதம் சரிந்து 672.1 ரூபாயாக குறைந்தது
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live today 2022 March 14:russia ukraine war nuclear tension inflation fed rate hike lic ipo crude oil gold price bitcoin rate
sensex nifty live today 2022 March 14 தடுமாறும் சென்செக்ஸ்.. தாறுமாறாக உயரும் இன்போசிஸ் பங்குகள்..!