திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தாய்மாமன் உருவச் சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காதுகுத்து விழா நடத்தப்பட்டது.
வினோபா நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி- பசுங்கிளி தம்பதியின் மகன் பாண்டித்துரை என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவருடைய மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீமற்றும் மகன் மோனேஷ் குமரன் ஆகியோரது காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் நேற்று நடைபெற்றது. பாண்டித்துரை இறந்ததால் அவருடைய சிலிக்கன் உருவச் சிலையை வைத்து தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது.
இதுதொடர்பாக பேசிய தாய் பசுங்கிளி, அக்காவின் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காதணி விழா நடைபெற வேண்டும் என்பது பாண்டித்துரையின் நீண்ட நாள் கனவு என்பதால் இவ்வாறு நடத்தப்பட்டதாக கூறினார்.