தாவணகரே : தாவணகரேவில் நடந்த லோக் அதாலத்தில், விவாகரத்துக்கு விண்ணப்பித்த வழக்குகளில் ஒரே நாளில் பத்து தம்பதியர் ஒன்றிணைந்தனர்.தாவணகரே மாவட்ட சிட்டி சிவில் நீதிமன்றத்தில், நீதிபதி ராஜேஸ்வரி தலைமையில் லோக் அதாலத் நடந்தது.ஒரே நாளில், 15 ஆயிரத்து 918 வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இதில், 7,362 வழக்குகளுக்கு உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டன. பொருளாதாரம், குடும்ப நலன், குற்றவியல் உட்பட அனைத்து நீதிமன்ற வழக்குகளும் அடங்கும்.இதில், சமாதான பேச்சு நடத்தி 30 குற்ற வழக்குகளும்; 65 காசோலை பவுன்ஸ் வழக்குகளில் 1.29 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கல்; வங்கிகள் தொடர்பான 26 வழக்குகள் தீர்த்து வைத்து 19.33 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கல்;பணம் வசூலிப்பு தொடர்பான 14 வழக்குகளில் 52 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கல்; மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 71 வழக்குகளில் 3.36 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கல் அடங்கும்.குறிப்பாக 10 விவாகரத்து வழக்குகளில், கணவர், மனைவியை வரவழைத்து பிள்ளைகளின் எதிர்காலம் கருத்திலும் கொண்டு ஒன்றிணைந்து வாழும்படி குடும்ப நல நீதிபதி அறிவுறுத்தினார். இதை தம்பதியரும் ஏற்றுகொண்டனர்.
Advertisement