தூத்துக்குடியிலிருந்து தேவகோட்டைக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட யானை சிறைபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியிலிருந்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு உரிய ஆவணங்கள் இன்றி யானையை வாகனத்தில் கொண்டு செல்லப்படுவதாக ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து ராமநாதபுரம் வனத்துறை அதிகாரிகள் யானையை கொண்டு சென்ற வாகனத்தை பட்டணம்காத்தான் பகுதியில் வழிமறித்து விசாரணை நடத்தினர். அப்போது யானை கொண்டு செல்வதற்கான எந்த ஒரு ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து யானை மற்றும் யானையை கொண்டுசென்ற இரண்டு நபர்களை சிறைப்பிடித்து ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். யானை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் யானை விடுவிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM