இலங்கை பல்லின மக்கள் பல மதத்தினர் மற்றும் பல்வேறு கலாச்சாரத்தை கொண்ட நாடு. இதில் நல்லிணக்கம், சகவாழ்வு, சகோதரத்துவம், புரிந்துணர்வு மற்றும் சமத்துவ நிலைக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வழங்கிவரும் பங்களிப்பு அளப்பரியது என்று வெகுஜன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பு 10 அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (12) நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் போரத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
தற்பொழுது நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை காணும் பொழுது அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அங்கு வருகை தந்திருந்தோரிடம் ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும கேட்டுக்கொண்டார்.
பரஸ்பரம் என்ற ரீதியில் பொறுமை, புரிந்துணர்வு, பரஸ்பர பழக்கப்பட்ட பயிற்சியாக கொள்ள வேண்டும். பரஸ்பர புரிந்துணர்வு, பொறுமைக்காக ஆகக்கூடுதலான வகையில் பங்களிப்பு வழங்கக்கூடியமை ஊடகத்திற்கும் தகவல் தொடர்பாளர்களைச் சார்ந்ததாகும்.. தற்பொழுது ஊடகம் மற்றும் தொடர்பாடல் போன்றவை மக்களுக்கான உன்னதமான மனிதனின் உயர்வான கண்டுபிடிப்பாகும்..
தகவல் தொடர்பாளர்கள் அல்லது ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் எமக்கு பாரிய பொறுப்பு உண்டு. தீயைப் போன்றதான ஊடக பாவனையை மனிதனின் நல் வாழ்வுக்காக பயன்படுத்த முடியும். துரரதிஷ்டமாக பெரும்பாலும் இடம்பெறுவது என்ன? தவறான அரசியல் மற்றும் ஊடக பயன்பாட்டின் மூலம் சகோதர மக்கள் தொடர்பில் சந்தேகம் வைராக்கியம் தவறான கண்ணோட்டத்திலான பார்வை முதலானவை சமீபகாலமாக இடம்பெற்றுள்ளன.
இதன் பெறுபேறாக சகோதர மக்களுக்கு பாரிய அளவில் இதயம் புண்பட சம்பவங்களை கவலையுடனும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எமக்கும் நாட்டின் எதிர்கால பயணத்துக்கும் இந்த நிலை மாற்றப்பட வேண்டும். மாற்றத்துக்காக சமநிலையை முன்னிலையை முன்னிலைப்படுத்தி செயற்படுவது ஊடகத்துக்குள்ள பொறுப்பாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாம் பிளவுபடுவதிலும் பார்க்க ஒன்றிணைக்கக்கூறும் அபிப்பிராயத்தில் எமது தரப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அவ்வாறு செயல்படும் போது உங்களுக்கு வழங்கப்படுவது வெளியிடும் சுதந்திரமாகும். வெளியிடும் சுதந்திரம் என்பது தமக்கு மாத்திரம் தாம் விரும்பும் கருத்தை வெளியிடுவதற்கும் விரும்பாதவற்றை தணிக்கை செய்வதற்கான சுதந்திரம் அல்ல அதாவது கருத்து சுதந்திரம் என்பது நாம் விரும்புவதை தெரிவிப்பதற்கும் விருப்பம் இன்றியேனும் தணிக்கையை மேற்கொள்வதற்குள்ள சுதந்திரம் அல்ல.
அதேபோன்று இந்த சுதந்திரம் என்பது என்ன? நான் அவ்வாறு கூறுவது இந்த எண்ணக்கருவை அடிக்கடி பயன்படுத்துவதில் முரண்படுவதற்கு இடமிருப்பதனாலேயே ஆகும். கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவர் உடன்பட்டாலும் உடன்படாவிட்டாலும் அழுத்தம் இன்றி தெரிவிப்பதற்கு உள்ள ஜனநாயக உரிமையாகும். இருப்பினும் நாம் இந்த உரிமையை பயன்படுத்துவது தேவையான தகவலின் அடிப்படையிலாகும். எண்ணக்கருவின் அடிப்படையில் அல்ல. எமது கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது எமது அனைவரின் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25ஆவது ஆண்டினை முன்னிட்டு ‘மீடியா டிரக்ரி் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இம்மாநாட்டிற்கு இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ்கனி கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
இவ்வருடத்தின் மீடியா போரத்தின் தலைவியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சேவையாற்றியவருமான ஓய்வு பெற்ற ஆசிரியை ஜனாபா புர்ஹான் பீ இப்திகார் தெரிவானார்.
பிஸ்ரின் மொஹமட் செயலாளராகவும், பொருளாளராக சிஹார் எம். அனீஸும் தெரிவாகினர். 18பேர் கொண்ட நிர்வாக உறுப்பினர் சபையும் தெரிபு செய்யப்பட்டது. போரத்தின் புதிய யாப்பின் திருத்தமும் இடம்பெற்றது.