உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, விரைவில் நேட்டோ நாடுகள் மீதும் தாக்குதலை முன்னெடுக்கக் கூடும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு உக்ரைனின் Lviv நகரில் இரவோடு இரவாக நிகழ்த்தப்பட்ட வான்வழி தாக்குதலில், 35பேர் உயிரிழந்தனர், 134 பேர் படுகாயமடைந்தனர். இந்த பகுதியானது நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இருக்கும் போலந்து நாட்டு எல்லைக்கு மிக அருகில் அமைந்திருக்கும் பகுதியாகும்.
இந்த நிலையில், உக்ரைனின் வான்பரப்பை மூடுவதாக அறிவிக்கவில்லை என்றால் ரஷ்யாவின் ஏவுகணைகள் நேட்டோ நாடுகளிலும் விழக்கூடும் எனவும், ரஷ்யா நேட்டோ நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ள அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் வான்பரப்பை மூடுவதாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனிடையே, உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில், தாக்குதலில் பலியான பொதுமக்களின் எண்ணிக்கை 2ஆயிரத்தை தாண்டியுள்ளது.