முன்னாள் தேசிய பங்குச் சந்தை தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சிறையில் வீட்டுச் சாப்பாடு கொடுக்க அனுமதிக்க முடியாது என்று டெல்லி
சிபிஐ
நீதிமன்றம் கூறி விட்டது. ஆனால் பகவத் கீதை மற்றும் ஹனுமான் சாலிசா ஆகியவற்றைப் பிடிக்க கோர்ட் அனுமதித்துள்ளது.
59 வயதான
சித்ரா ராமகிருஷ்ணா
, 2013ம் ஆண்டு முதல் தேசிய பங்குச் சந்தை நிப்டியின் தலைவராக இருந்தவர். இவர் “
இமயமலை சாமியார்
” ஒருவருடன் ரகசிய தொடர்பில் இருந்து வந்ததாகவும், அந்த பெயர் முகம் தெரியாத சாமியார் கேட்ட பல முக்கியமான பங்குச் சந்தை ரகசியங்களைக் கூறி வந்ததாகவும், இதனால் அரசுக்கு மிகப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வழி வகுத்ததாகவும் இவர் மீது சிபிஐ குற்றம் சாட்டியது. கிட்டத்தட்ட 20 வருடமாக இந்த சாமியார் – சித்ரா தொடர்புகள் இருந்து வந்ததாகவும் சிபிஐ கூறியிருந்தது நாட்டையே அதிர வைத்தது.
இதையடுத்து அவர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. பின்னர் சித்ரா கைதும் செய்யப்பட்டார். அவரை கோர்ட் 14 சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சித்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இமயமலைச் சாமியார் என்று சித்ரா கூறியது கட்டுக்கதை என்றும், உண்மையில் அவர் முன்னாள் பங்குச் சந்தை அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியன் என்றும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்தது. இருவரும் சேர்ந்து பல வெளிநாடுகளுக்கும் ஜோடியாக சுற்றுலா போயிருந்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில் தனக்கு சில சலுகைகளை அனுமதிக்க வேண்டும் என்று கோரி சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி சிபஐ கோர்ட்டில் மனு செய்திருந்தார். அதில், தனக்கு வீட்டு சாப்பாடு அனுமதிக்க வேண்டும் என்று முக்கியமாக கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் அகர்வால் கூறுகையில், எல்லாக் கைதிகளும் சமம்தான். சித்ரா ராமகிருஷ்ணா உயர் பதவி வகித்தவர் என்பதற்காக அவரை விஐபி கைதியாக பார்க்க முடியாது. ரூல்ஸையும் மாற்ற முடியாது. அவர் எல்லாக் கைதிகளும் அனுபவிக்கும் அதே வசதிகளைத்தான் அனுபவிக்க முடியும். வீட்டுச் சாப்பாடெல்லாம் அனுமதிக்க முடியாது. பகவத் கீதை, ஹனுமான் சாலிசா புத்தகங்களை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது என்று கூறி விட்டார்.