பஞ்சாப்: சர்வதேச கபடி வீரர் சுட்டுக்கொலை – யார் அவர்? என்ன காரணம்?

சர்வதேச கபடி வீரர் சந்தீப் நங்கல், மர்மகும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாலியன் கிராமத்தில், கபடி போட்டி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கே வந்த மர்மகும்பல் ஒன்று, சர்வதேச கபடி வீரரான சந்தீப் நங்கல் ஆம்பியனை, தலை மற்றும் மார்பு பகுதியில் சுட்டுக் கொலை செய்தனர். சுமார் 20 குண்டுகள் அவரது உடம்பில் பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் மட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கபடி போட்டிகளில் பங்கேற்ற அபாரமாக விளையாடி வருகிறார் சந்தீப் நங்கல். சமீபகாலமாக கபடிப் போட்டிகளில் அதிகளவிலான வெற்றிகளின் மூலம் புகழ் அடைந்து வந்தார். கபடி போட்டியில் தனது திறமையால் சாதித்துவந்த நிலையில், கபடி கூட்டமைப்பை ஒன்றையும் நிர்வகித்து வந்தார் சந்தீப் நங்கல்.
image
இந்நிலையில், கோல்ஃப் உபகரணங்கள் மற்றும் கூட்டமைப்புடன் சந்தீப் நங்கலுக்கு இருந்த பிரச்னை காரணமாக இன்று மாலை 6 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு தகவல் போலீசாரின் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும். சந்தீப் நங்கலின் ரசிகர்கள் அவருக்கு சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.