புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 31-ல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உரையுடன் துவங்கியது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 11-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாராளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…உத்தர பிரதேசத்தை யோகி ஆதித்யநாத் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார் – பிரதமர் மோடி கருத்து