பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ட்ரெயிலரை நடிகர் சிம்பு சமூகவலைத்தளங்களில் வெளிட்டுள்ளார்.
சுராஜ் வெஞ்சரமூடு, ஷோபின் ஷாகீர் உள்ளிட்டோர் நடிப்பில், ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இந்தத் திரைப்படத்தில் ரஷ்யாவில் வேலைக்கு செல்லும் மகன், தனது வயதான தந்தைக்கு துணையாக ரோபா ஒன்றை விட்டுச் செல்கிறான்.
ரோபாவை முதலில் வெறுக்கும் சுராஜ் வெஞ்சரமூடு, பின்னர் மகனை மறக்கும் அளவுக்கு, ரோபோவுடன் மிகுந்த பாசம் கொள்கிறார். அதன்பிறகு மனிதனால் உருவாக்கப்பட்ட எந்திரத்துக்கும், மனிதனுக்கும் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து வெளியான இந்த திரைப்படம், மலையாள திரையுலகையும் தாண்டி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் வாங்கியுள்ளார். இதையடுத்து சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திரத்தில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் நடிக்க, மகனாக பிக்பாஸ் புகழ் தர்ஷனும், அவரின் காதலியாக லாஸ்லியாவும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை சபரி மற்றும் சரவணன் இயக்கியுள்ளனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், ‘கூகுள் குட்டப்பா’வின் ட்ரெயிலரை நடிகர் சிம்பு வெளிட்டுள்ளார்.
<iframe width=”683″ height=”384″ src=”https://www.youtube.com/embed/Qipxma3OWpc” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>