உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி திரைஅரங்குகளில் வெளியாக உள்ளது. ஆக்ஷன் திரில்லர் படமான இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, நரேன், செம்பன் வினோத் ஜோஸ், மகேந்திரன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முன்னதாக விக்ரம் படத்தின் டைட்டில், டீசருடன் 2020ம் ஆண்டு கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த சூழலில் இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பாளர்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகும் என நடிகர் கமல்ஹாசன் இன்று காலை அறிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் “விக்ரம்” உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல்..” என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். மேலும் இப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ்யையும் அவர் பகிர்ந்துள்ளார். இது அவரது ரசிகர்களால் சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை கையில் எடுத்துள்ள நமது நெட்டிசன்கள் சுவையான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அவை இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது.
விக்ரம் பட பட ட்ரெண்டிங் மீம்ஸ்:
இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சில:
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“