ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான போர் மற்றும் அவரின் கடுமையான கோபத்திற்கு அவர் எடுத்துக்கொள்ளும் புற்றுநோய்க்கான ஸ்டீராய்டு சிகிச்சை முறைகளால் ஏற்பட்டுள்ள மனநல பாதிப்புகளே முக்கிய காரணம் என மேற்கு நாடுகளை சேர்ந்த உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் பல்வேறு நெருக்கடி மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை விளாடிமிர் புதின் தொடர்ந்து நடத்தி வருவதற்கு அவருக்கு ஏற்பட்டுள்ள மனநோய்யே காரணம் என அவுஸ்ரேலியா, கனடா, நியூஸிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய ஐந்து நாடுகளை சேர்ந்த உளவு கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த உளவு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், ஜனாதிபதி புதின் முடிவெடுக்கும் திறனானது கடந்த ஐந்து ஆண்டுகளில் அடையாளம் காணப்படும் அளவிற்கு மாறியுள்ளதாகவும், அவரை சுற்றி உள்ளவர்களிடம் அவர் சொல்வதிலும் அவர் உலகத்தை உணர்ந்து கொள்வதிலும் நிறைய மாற்றங்கள் அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்கு ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு ஏற்பட்டுள்ள பார்கின்சன், டிமென்ஷியா நோய்கள் மற்றும் புற்றுநோய்க்கு எடுத்துக்கொள்ளும் நீண்ட கால ஸ்டீராய்டு சிகிச்சை முறைகளால் ஏற்பட்டுள்ள மன பாதிப்புகளே காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் வெளியிட்ட பிரித்தானிய உளவுத்துறை, புதினின் இந்த கடுமையான கோபத்திற்கு நீண்டகால பயன்பாட்டினால் ஏற்படும் மனச்சிதைவே காரணம் என தெரிவித்துள்ளது.
69 வயதை தொட்டிருக்கும் ஜனாதிபதி புதின் முகம் மற்றும் கழுத்து பகுதியில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் தோலில் ஏற்பட்டுள்ள வெளிறிய நிறம் போன்ற மாற்றங்கள் வெளிப்படையாக அடையாளம் காண முடிகிறது என தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதைய நிகழ்வுகளில் அவர் விருந்தினர்களை சந்திக்கும் முறை மற்றும் தனிமை படித்திக்கொள்ளும் முறைகளின் மூலம் அவர் பிற துணை நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முயற்சிப்பதாக தெரிகிறது என உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடனான சந்திப்பின் போது கடைப்பிடிக்கப்பட்ட இடைவெளியானது இதனை உறுதிப்படுவதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
நாம் தோற்றுவிட்டோம்… போரை நிறுத்துங்கள்: கதறும் ரஷ்ய வீரர்கள்