மைசூரு, : மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, மைசூரு பல்கலைக்கழகம் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் அறிவித்துள்ளது.மைசூரு பல்கலைக்கழகத்தின் 102 வது பட்டமளிப்பு விழா, வரும் 22 ல் நடக்கிறது. பல்கலை வேந்தரும், கர்நாடக கவர்னருமான தாவர்சந்த் கெலாட் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கவுள்ளார்.இது குறித்து மைசூரு பல்கலை துணை வேந்தர் ஹேமந்த் குமார் நேற்று கூறியதாவது:
இந்தாண்டு மொத்தம், 28 ஆயிரத்து 581 இளநிலை பட்டமும், 5,677 முதுகலை பட்டமும் வழங்கப்படும். சில மாணவர்கள் துறை வாரியாக தங்க பதக்கங்கள் பெறுவர்.வரும் 17 ல் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த தினம். அவரது சமூக சேவையை பாராட்டி, அவுருக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கப்படுகிறது. அவரது மனைவி அஸ்வினி விழாவுக்கு வருவதற்கு ஒப்புகொண்டுள்ளார்.இதற்கு முன், 1976ல் அவரது தந்தை ராஜ்குமாருக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கப்பட்டது. தற்போது இவரது மகனுக்கு வழங்குவது பல்கலைக்கு கிடைத்த பெருமை.இது போன்று கர்நாடகாவை சேர்ந்த மூத்த விஞ்ஞானி வி.எஸ்.அத்ரே, நாட்டுப்புற பாடகர் மலவள்ளி மஹாதேவஸ்வாமி ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement