கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இது பெண்ணின் கருப்பை வாயில் ஏற்படும் ஒரு புற்றுநோயாகும்,
இன்றைக்கு பல பெண்கள் இப்பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படலாம்.
ஆரம்பத்திலே இதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை கண்டறிந்து சரி செய்வது நல்லது. தற்போது அவற்றை பார்ப்போம்.
அறிகுறிகள்
- மாதவிடாயின்போது அதிக ரத்தம் வெளியேறுதல்
- வெள்ளைப்படுதல்
- இடுப்பு, முதுகு, கால்களில் கடுமையான வலி
- வாந்தி
- அதிக சோர்வு.
எப்படி தப்பிக்கலாம்?
தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
அதிக அமிலத்தன்மை உடைய உணவுகளை தவிர்க்க வேண்டும். ஒமேகா 3, பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
குழந்தைப்பேற்றுக்கு மத்தியில் போதிய இடைவெளி இருக்க வேண்டும்.
பிறப்புறுப்பை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாதவிடாயின்போது சானிட்டரி நாப்கின்களை மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
கழிப்பறை மற்றும் வசிக்கும் இடத்தில் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்