பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளரான
டி. இமான்
தனது மனைவியை விவாகரத்து செய்து உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இமான் மறுமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் டி,இமானுக்கும், மோனிகா ரிச்சர்டு என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தச் சூழலில், சில மாதங்களுக்கு முன்பு சட்ட ரீதியாகத் தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக ட்விட்டர் மூலம் அறிவித்தார் இமான்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய பதிவில், என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை என்பது பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல என குறிப்பிட்டிருந்தார்.
பிறவி பலனை அடைஞ்சுட்டேன் ஆண்டவரே: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி..!
டி இமானின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து
டி. இமான் மறுமணம்
செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இரு தரப்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் இமான் அரேஜ் மேரேஜ் செய்ய உள்ளதாக கூறப்பட்டது. மேலும் மே மாதம் திருமணம் செய்ய பேசி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்தன.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த டி இமான், தனது மறுமணம் குறித்து தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்க வேண்டும் என்றும், தன்னுடைய குழந்தைகளிடம் அன்புடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்றும் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“எதற்கும் துணிந்தவன்” படம் எப்படி இருக்கு?