ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மீனவர்கள் வலையில் அரியவகை பலூன் மீன் சிக்கியது.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் வலையில் பலூன் மீன் என்றழைக்கப்படும் puffer fish சிக்கியது. இதனை மீனவர்கள் வீடியோ பதிவு செய்த நிலையில், மீனை கடலில் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த பலூன் மீன் கொடிய விஷத்தை கக்கும் தன்மை உடையது என மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.