எனது பிள்ளை மிக சிரமம் எடுத்து படித்தும், அதன் பெறுபேற்றை இன்று அனுபவிக்க முடியாமல் போய்விட்டது என யாழில் டெங்கு காய்ச்சலால் உயரிழந்த மாணவனின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 இல் கல்வி பயின்ற வ.அஜய் என்ற மாணவன் அண்மையில் டெங்கு நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார்.
கடந்தாண்டுக்கான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றிரவு வெளியான நிலையில் குறித்த 155 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.
யாழ். மாவட்ட வெட்டப்புள்ளி 148 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவன் டெங்கு நோயினால் உயிரிழந்த தினத்தன்று அவர் பரீட்சையில் சித்தியடைவார் என அவரது ஆசிரியர் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது மகன் மிக சிரமம் எடுத்து படித்தும், சித்தியடைந்தும் அந்த சந்தோசத்தை அனுபவிக்க எனது மகன் உயிருடன் இல்லை என அவரது தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
எனது மகனுக்கு கடவுள் இப்படி ஒரு நோயை கொடுத்துவிட்டார்.
டெங்குவினால் எனது மகன் உயிரிழந்தமையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எங்களோடு இருக்கவிடாமல் என் பிள்ளையை கடவுள் பிரித்துவிட்டார். மொத்த குடும்பமும் வேதனையில் இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி! மாணவன் உயிருடன் இல்லை – யாழில் துயரம் (Video)