ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக இங்கிலாந்து ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதலை அதிகப்படுத்திய நிலையில் புதினின் உடல்நிலை பற்றிய செய்திகள் பரவி வருகின்றன. அவரின் முகஅமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வெளிறிய நிலையில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு பார்க்கின்சன் நோய் இருப்பதாகவும் அதிகமாக ஸ்டிராயிட் மாத்திரைகளை உட்கொள்வதால் தளர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு மூளையில் பிறழ்வு ஏற்பட்டிருப்பதாகவும் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
கடந்த 5 ஆண்டுகளாக அவரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் முடிவு எடுக்க முடியாத தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புதினுக்கு சகிப்புத் தன்மை குறைந்து வருவதாகவும் பிரிட்டன் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்