வாலாஜாபாத் அருகே போர்வீரர்களின் தியாகத்தை போற்றும் தூங்கு தலை வீரக்கல் கண்டறியப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வில்லிவலம் கிராமத்தில் சிற்ப கல் ஒன்றை கிராம மக்கள் வழிபட்டு வருவதாக வாலாஜாபாத் வாட்டார வரலாற்று ஆய்வு மையத்திற்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத் தலைவர் அஜய்குமார், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அது போருக்கு செல்லும் வீரனின் தியாகத்தை போற்றும் தூங்கு தலை கல் என கண்டறியப்பட்டது.
பண்டைய காலங்களில் போருக்குச் செல்லும் மன்னர், படைத்தலைவர்கள், படை வீரர்கள் ஆகியோர் போரில் வெற்றிபெற வேண்டும் என போர் தெய்வமான கொற்றவையை வேண்டிக்கொள்வார்கள். அதைத்தொடர்ந்து போரில் வெற்றி பெற்ற பிறகு, அதற்கு நேர்த்திக்கடனாக தன் தலையை தானே கொய்து, கொற்றவை தேவிக்கு அர்ப்பணிபார்கள். அவ்வாறு செய்யும் வீரர்களின் நினைவாக, நடுகல் வைத்து வழிபடும் வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM