பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல, வரும் மார்ச் 15 முதல் 18 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இக்கோயிலுக்குச் செல்ல ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதோஷம் மற்றும் பவுர்ணமியே முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல வரும் மார்ச் 15 முதல் 18 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM