மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, சோபின் சோஹிர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘
ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்
வெர்ஷன் 5.25’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தற்போது அந்தப் படம் தமிழில் ‘
கூகுள் குட்டப்பா
’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது.
அந்தப் படத்தை இயக்குனர்
கே.எஸ்.ரவிகுமார்
தயாரித்து முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படத்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
லெஜண்ட் சரவணாவுடன் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை…!
இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள்தர்ஷன் மற்றும்
லாஸ்லியா
ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன்
யோகிபாபு
, மனோபோலா, மாரியப்பன், ப்ராங் ஸ்டார் ராகுல் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.தனிமையில் இருக்கும் வயதானவருக்கும், ரோபோவுக்கும் இடையே ஏற்படும் உறவே இப்படத்தின் மையக்கரு.
இந்நிலையில் இன்று படத்தின்
ட்ரைலர்
வெளியாகியுள்ளது. இன்று சென்னையில் ட்ரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கேஎஸ்ரவிக்குமார், இயக்குனர் ஆர்கே செல்வமணி, லாஸலியா,
தர்ஷன்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!