உலக நாடுகளின் பொருளாதார தடையால் ரஷ்யாவில் சாமானிய மக்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாம்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இந்தத் தடையால் ரஷ்யாவின் தினசரி வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்துள்ளது.
இந்தப் போரை ரஷ்யர்கள் பலர் எதிர்த்தாலும் கூட உக்ரைனின் பிடிவாதத்தால்தான் இந்தப் போரே வந்ததாக பலரும் கருதுகிறார்கள். ஆனால் உக்ரைனின் பிடிவாதம்தான் காரணம் என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை, ஐரோப்பிய நாடுகளும் அதை அங்கீகரிக்கவில்லை.
இந்த நிலையில் இப்போரால்
ரஷ்ய மக்கள்
பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பல்வேறு நிதி நெருக்கடிகளை ரஷ்ய மக்கள் சந்தித்து வருகின்றனர். விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த 2 விஷயம் சரியில்லை.. புடினுக்கு என்னமோ ஆயிருச்சு.. கிளப்பி விடும் இங்கிலாந்து!
ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு குறைந்து விட்டது. பிப்ரவரி 20ம் தேதி 5000 ரூபிளுக்கு வாங்கிய பொருட்களை இப்போது வாங்க வேண்டும் என்றால் 8000 ரூபிள் செலவிட வேண்டியிருக்கிறதாம். பொருளாதாரத் தடை இருப்பதால் ரஷ்யாவால் டாலரில் பரிவர்த்தனைகளை செய்ய முடியவில்லை. இதனால் சீனாவின் யுவான் நாணயத்தின் கீழ் ரஷ்யா தனது அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவும் ரஷ்யாவுடன் இந்திய ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
சர்க்கரை விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளதாம். ஸ்மார்ட்போன், லேப்டாப் ஆகியவற்றின் விலையும் 10 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாம்.டிவி விலையும் உயர்ந்து வருகிறதாம். பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் தயாரிப்புகள் ரஷ்யாவில் விற்பனையை நிறுத்தியுள்ளன.
பகவத் கீதை படிச்சுக்கங்க.. வீட்டுச் சாப்பாடெல்லாம் தர முடியாது.. சித்ராவுக்கு “நோ”!
வங்கித் துறையும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. ரஷ்யாவிலிருந்தும் ரஷ்யாவுக்கும் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஆப்பிள், கூகுள் பே, மாஸ்டர்கார்ட், விசா போன்றவற்றின் சேவைகள் ரஷ்யாவில் பல கட்டுப்பாடுகளுடன் நடந்து வருகின்றன.
வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. தினசரி வாழ்க்கைக்கான செலவுகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் சாதாரண மக்களின் நிலைதான் கேள்விக்குறியாகியுள்ளது. பொருளாதார தடை அறிவிக்கப்பட்டதுமே ரஷ்ய மக்கள் பல்வேறு முக்கியப் பொருட்களை வாங்கி வீட்டில் ஸ்டாக் வைக்க ஆரம்பித்து விட்டனராம். இதனால் பல பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது.
விரைவில் போர் நிற்காவிட்டால் ரஷ்யாவில் நிலைமை மேலும் மோசமாகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் சீனாவின் உதவியை ரஷ்யா நம்பியிருக்கிறது. சீனாவும், ரஷ்யாவைக் கைவிடாது என்றே தெரிகிறது.